01st January 2021 16:30:58 Hours
12 வது படைப் பிரிவின் படையினர் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு ஒத்துழைக்கும் முகமாக கன்னோருவயிலுள்ள மெத் மால் சேவன சிறுவர் இல்லத்தில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு எழுதுபொருள் பொருட்கள், பைகள் மற்றும் காலணிகள் அடங்கிய பரிசுப் பொதிகளை மதிய உணவு விருந்துடன் வெள்ளிக்கிழமை (1) வழங்கினர்.
12 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மேலதிகமாக, இப்பகுதியில் தகுதியான இரண்டு குடும்பங்களுக்கு பல ஜோடி காலணிகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் 12 வது படைப் பிரிவின் படைத் தளபதி படைப் பிரிவின் பணியாளர்களுடன் இணைந்து கலந்து கொண்டார். Best Sneakers | Nike