31st December 2020 17:30:41 Hours
பொது பொறியாளர் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துமிடு ஜயசிங்க அவர்கள் புதன்கிழமை 30 ஆம் திகதி 15 வது (தொண்) பொறியாளர் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார். அவரை 15 வது (தொண்) பொறியாளர் படையணியின் கட்டளை அதிகாரி, மேஜர் பி.எம்.பி.கே. பெலிகஹவத்த அவர்கள் வரவேற்றார்.
அங்கு கட்டளை அதிகாரியின் விளக்கம், படையினர் மத்தியலான உரை ,மரக்கன்றுகளை நடவு செய்தல் மற்றும் அதிகாரிகளுடனான மதிய உணவு நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.அங்கு விஜயத்தினை மேற்கொண்ட பிரிகேட் தளபதி இராணுவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் 15 (தொண்) பொறியாளர்கள் படையணியின் படையினரால் ஆற்றப்படும் பங்களிப்பை பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட ,அதிகாரிகள் கேணல் திட்ட அதிகாரி லெப்டினன் கேணல் எஃப் ஜோசப் மற்றும் படைப்பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர். buy footwear | Nike Releases, Launch Links & Raffles