Header

Sri Lanka Army

Defender of the Nation

01st January 2021 15:30:58 Hours

கடந்த 24 மணி நேரத்திற்குள் 557 பேருக்கு தொற்று உறுதி - நொப்கோ தெரிவிப்பு

இன்று (2) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 557 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் ஏனைய 555 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 192 பேர் கொழும்பு மாவட்டம், 127 பேர் கம்பஹா மாவட்டம், 61 பேர் களுத்துரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 175 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (02) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40104 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் மீன் சந்தை கொத்தணியில் (37045) இருந்து மொத்தமாக 33397 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் (02) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 43855 ஆகும். அவர்களில் 36154 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 7493 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (02) கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 826 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் தர்கா நகரம் , களுத்துறை ஆலையடிவேம்பு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் இன்று காலை(02) திகதி வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆகும்.

இன்று காலை (02) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து EY 264 விமானம் ஊடாக 43 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 26 பயணிகளும் மற்றும் கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 90 பயணிகளும் பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். உக்ரைனில் இருந்து PQ 455 விமானம் ஊடாக 175 பயணிகளும் துர்கியில் இருந்து TK 730 விமானம் ஊடாக 18 பயணிகளும் சீனாவில் இருந்து UL 867 விமானம் ஊடாக 7 பயணிகளும் ஓமானில் இருந்து WY 373 விமானம் ஊடாக 32 பயணிகளும் மற்றும் ஜேர்மனியில் இருந்து UL 554 விமானம் ஊடமாக 04 பயணிகளும் வரவுள்ளனர். வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (02) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் மையங்களில் 4915 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (01) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 14565 ஆகும். Authentic Nike Sneakers | adidas Yeezy Boost 700 , Ietp