01st January 2021 21:17:05 Hours
1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பிரிவு படையினரால் கட்டப்பட்ட நன்னீர் மீன் குளத்தில் 5000 நன்னீர் மீன்களின் முதல் குஞ்சுகள் இடும் நிகழ்வானது சனிக்கிழமை (26) எல்ல- கந்தலாயில் இடம்பெற்றது.
1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ். தேமுனி தனது படைகளுடன் சேர்ந்து முதல் சில செட் மீன்களை குளத்திற்குள் இட்டார்.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஹண்டுன்முல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரி கட்டளை மேஜர் டபிள்யூ.ஆர்.ஐ.சி பிரசன்ன அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் தம்புல்லயில் உள்ள தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு அதிகாரசபையின் அதிகாரிகளின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்படும் குறித்த நன்னீர் மீன் வளர்ப்பை ஒரு துணை ஊட்டச்சத்து திட்டமாக மேலும் மேம்படுத்த திட்மிடப்பட்டுள்ளது.
1 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் கலந்து கொண்டனர். latest jordans | Jordan Ανδρικά • Summer SALE έως -50%