Header

Sri Lanka Army

Defender of the Nation

05th January 2021 13:08:43 Hours

ஆனவிலந்தங்குளத்திலுள்ள மாணவர்களுக்கு படையினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிறிஸ்மஸ் பருவகாலத்தினை முன்னிட்டு,கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 66 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 662 வது பிரிகேட் படைப்பிரிவின் 20 வது (தொண்) விஜபாகு காலாட்படை படைப்பிரிவின் படையினர் கிளிநொச்சி ஆனவிலந்தங்குளத்திலுள்ள கிறிஸ்துவின் தேவாலயத்தில் வைத்து 40 வரிய மாணவர்களுக்கான பாடாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை 25 ஆம் திகதி வழங்கினர்.

66 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் 662 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரவி பதிரவிதான, 20 வது தொண்) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஜே.ஜி.ஏ.எம் சுபசிங்க மற்றும் அனைத்து படையினர் ஆகியோரின் நன்கொடையின் மூலம் வெற்றிகரமாக குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, 39 வரிய மாணவர்கள் அந்த பரிசுப் பொதிகளைப் பெற்றனர், அதே நேரத்தில் சமீபத்திய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் பார்வையாளர்களுக்கு முன்னால் தங்கள் அழகியல் திறமைகளை அரங்கேற்றினர்.

இந்நிகழ்ச்சியில் படையினர், 662 வது பிரிகேட்டின் பணியாளர்கள் , அக்காராயங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைத்து கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. spy offers | Air Jordan