05th January 2021 14:07:43 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட விஷேட அனுசரணையினை கொண்டு கல்கந்த புரண ரஜ மகா விகாரை மற்றும் எப்பவல பிரிவெனாவிலுள்ள 88 பௌத்த தேரர்களுக்கான எழுதுபொருள் பொருட்கள் வழங்கும் நிகழ்வானது சனிக்கிழமை 02 ஆம் திகதி இடம்பெற்றது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட மற்றும் இலங்கை பீரங்கி படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி கொட்டுவேகொட ஆகியோரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முகம்மாக, கொழும்பில் உள்ள நன்கொடையாளர் திரு. சுரேன் டி சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு அனுசரனை வழங்கினர்.
மேலும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் கே.எல்.என், கேணல் அனில் சமவீர, கேணல் சஞ்சய வனசேகர மற்றும் லெப்டினன்ட் கேணல் பிரதீப் விதானகே ஆகியோர் இந்த நிகழ்வைவெற்றிகரமாக நிறைவு செய்ய தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கினர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள் பிரதிநிதி நன்கொடையாளர்களுடன் இணைந்து சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Sport media | Air Jordan