Header

Sri Lanka Army

Defender of the Nation

05th January 2021 10:07:43 Hours

இதுவரை அதிகமான கொவிட் தொற்று கொழும்பில்- நொப்கோ தெரிவிப்பு

இன்று (05) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 468 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விநாட்டிலுள்ள இலங்கையர் ஏனைய 467 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 183 பேர் கொழும்பு மாவட்டம், 73 பேர் கண்டி மாவட்டம், 72 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 139 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (05) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,476 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் (38417) இருந்து மொத்தமாக 35059 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் (05) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 45241 ஆகும். அவர்களில் 37816 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 7,212 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (05) கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 565 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் ரத்னபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் இன்று காலை(5) திகதி வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 215ஆகும்.

இன்று காலை (05) அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 66 பயணிகளும் மற்றும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 25 பயணிகளும் பயணிகளும் சீனாவில் இருந்து MU 713 விமானம் ஊடாக 5 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 222 விமானம் ஊடாக 68 பயணிகளும் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 245 பயணிகளும் இந்தியாவில் இருந்து EMB 135 விமானம் ஊடாக 3 பயணிகளும் இந்தோநேசியாவில் இருந்து UL 1365 விமானம் ஊடாக 7 பயணிகளும் மற்றும் சிங்கப்பூரில் இருந்து SQ 468 விமானம் ஊடாக 14 பயணிகளும் இன்று வருகைதரவுள்ளனர். வருகை தந்த அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (05) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் 4945 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (04) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12826 ஆகும். Best jordan Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival