03rd January 2021 11:27:39 Hours
படையினரின் உடல் தரத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் மத்தியில் ஒரு வாய்ப்பை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட, 58 வது படைப் பிரிவின் 2020 இற்கான 'படைப் பிரிவு தளபதி சவால் கிண்ண' உள்ளக பட்டாலியன் போர் தடை தாண்டும் போட்டியானது 2020 டிசம்பர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பனாகொடையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக 58 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோ அவர்களும் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் காலாட் படை பணிப்பாளர் நாயகம் பிரஜேடியர் ஸ்ரீநாத் அரியசிங்க அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிற்கு வருகை தந்த பிரதம அதிதியவர்களை 582 வது பிரிகேட் தளபதி கேணல் காவிந்த பாலசூரிய அவர்கள் 581 வது மற்றும் 582 தளபதிகளுடன் இணைந்து வரவேற்றார்.
ஒரு அதிகாரி மற்றும் ஒன்பது ஏனைய இராணுவச் சிப்பாயினரை உள்ளடக்கி 6 அணிகள் பங்குபற்றின. அதில் 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி , 1 வது இலங்கை சிங்கப் படையணி , 1 வது கெமுனு ஹேவா படையணி, 9 வது கெமுனு ஹேவா படையணி, 5 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 6 வது விஜயபாகு காலாட் படையணி ஆகிய படையணிகள் உள்ளடங்கும். போட்டியானது 18 தடைகளை உள்ளடக்கியதாக அமைந்தன.வீரர்கள் 1 மைல் ஓடுவதிலும், தேவையான தரங்களை பூர்த்தி செய்யும் போட்டியில் வெவ்வேறு தடைகளின் வரிசையை கடப்பதிலும் ஆர்வத்தை காண்பித்தனர்.
1வது இலங்கை சிங்கப் படையணி 1800 மதிப்பெண்களுடன் (முழு மதிப்பெண்கள்) போட்டியில் சாம்பியன்ஷிப்பினை சுவீகரித்துக் கொண்ட அதேவேளை 1080 மதிப்பெண்களுடன் 6 வது விஜயபாகு காலாட் படையணி இரண்டாம் இடம்தை பெற்றுக் கொண்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களானது சிறப்பு விருந்தினர் மற்றும் படைப் பிரிவின் படைத் தளபதியினால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான கலந்து கொண்ட பிரிகேடியர் ஸ்ரீநாத் அரியசிங்க தனது உரையில், சிப்பாயின் திறனை மேம்படுத்துவதற்காக படையினரை அத்தகைய வாய்ப்பை அடைய ஊக்குவிப்பதில் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அனைத்து காலாட்படை பிரிவுகளையும் தங்கள் பிரிவுகளிலும் இதேபோன்ற போட்டியை நடத்த வழிநடத்துவதாக அவர் வலியுறுத்தினார். மேலும், விழாவில் சிறப்பு விருந்தினராக தன்னை அழைத்த படைப் பிரிவின் படைத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.
அடுத்து மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ அவர்கள் தனது உரையில், முக்கிய மதிப்புகள் மற்றும் எப்போதும் மாறிவரும் போர்க்கள சவால்களை ஒரு திறமையான சக்தியாக சமாளிக்க சிப்பாயின் உடல் மற்றும் மன சுறுசுறுப்பை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய போட்டியை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஏற்பாட்டுக் குழுவிற்கு அவர் தனது சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
குறித்த நிகவில் அனைத்து பிரிகேட் தளபதிகள், இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மைய தளபதி, இலங்கை இராணுவ உடல் பயிற்சி பாடசாலை தளபதி,கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர். trace affiliate link | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers