Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2021 14:27:39 Hours

21 வது படைப் பிரிவின் படையினரால் அனுராதபுர குளக்கட்டு பிரதேசத்தில் மர நடுகை

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21வது படைப் பிரிவு தலைமையகத்தின் முயற்சியில் குடாவலபோல குளம் ,பூனவ குளம், கல்கடவல குளம் மற்றும் தம்மெனலவக்க குளம் ஆகிய பகுதிகளைச் சுற்றி மருதை,நாக, மாரா, கரண்ட, மேடம், கருங்களி, நிகா, ஹால்மில்லா மற்றும் மஹோகனி உள்ளிட்ட 565 மரக் கன்றுகள் 2020 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் மூன்று நாட்களில் 211 வது பிரிகேட் படையினரின் பங்களிப்புடன் 21 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடப்பட்டன.

மரம் நடுதல் மற்றும் காடு வளர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு நவ ரத்தக்' எனும் திட்டத்திற்கு இணங்க, வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களினால் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒத்து ழப்பு வழங்கப்பட்டது. குறித்த திட்டமானது 2020 நவம்பர் 23, 25 மற்றும் டிசம்பர் 22 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டமானது 211வது பிரிகேட் தளபதி கேணல் ரொஹான் ஜயகொடி அவர்களின் மேற்பார்வையில் நிறைவு பெற்றது.

அனுராதபுரத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகம், மதவாச்சி பிரதேச செயலாளர், அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிலதாரி (அரச அதிகாரிகள்), விவசாய, நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் தொழில்நுட்ப ஆலோசனைகள், தொழிலாளர் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கி இராணுவத்துடன் இணைந்து கொண்டனர். spy offers | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov