01st January 2021 20:47:05 Hours
புத்தாண்டின் முதல் வேலை நாள்லில் கடமைகளை ஆரம்பிப்பதற்கு இன்று (01) பி.எம்.ஐ.சி.எச் வளாகத்தில் உள்ள பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி காரியாலயத்திற்கு வருகை தந்த பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை அலுவலக பணியாளர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். வரவேற்றனர்.
பதவி நிலை பிரதானி காரியாலயத்தில் சேவை செய்யும் முப்படை சிரேஸ்ட அதிகாரிகள் வழங்கிய இராணுவ சம்பிரதாயங்களுக்குப் பிறகு, பாரம்பரிய இனிப்பு வகைகளைக் கொண்ட தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது. இதன்போது அங்கிருந்த அதிகாரிகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா பின்னர் அங்கு பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு பொதிகளை வழங்கினார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அதிகாரிகள் மற்றும் பங்குபற்றாளர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பணிப்பாளர் திரு சுனில் திசாநாயக்க, மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே டி.ஜி.ஜி.எஸ், கடற்படை இணைப்பாளர் ரியர் அட்மிரல் ரோஹன் லெல்வல , வான் படை இணைப்பாளர் எயார்கொமண்டர் ரொஹான் ஹெமசிங்க ஆகியோரும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். Sportswear free shipping | FASHION NEWS