Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2020 19:50:41 Hours

நிலை​ உயர்த்தப்பட்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கஜபா படையணின் படையினரால் கெளரவிப்பு

நான்கு நட்சத்திர ஜெனராலாக நிலையுயர் பெற்ற நாட்டுக்காக அர்ப்பணிப்பு சேவையினை வழங்கிய பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இன்று காலை 31 ஆம் திகதி இராணுவத் தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாய பிரகாரம் கௌரவ மரியாதையளிக்கப்பட்டது.

அவரது அயராத சேவை மற்றும் தன்னலமற்ற அணுகுமுறைக்கான தகுதியான நிலை உயர்வானது 2020 டிசம்பர்28 ஆம் திகதி முப்படைகளின் தளபதியும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டதோடு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ) கமல் குணரத்ன அவர்களும் ஜெனரலாக நிலையுயர்த்தப்பட்​டுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தின் இராணுவ தளபதி செயலக பிரதான நுழைவாயிலினை சென்றடைந்த ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தின் தலைமையக பட்டாலியன் கட்டளை அதிகாரி கேணல் இந்திக்க பெரேரா அவர்கள் வரவேற்றதோடு, அவருக்கு இராணுவ சம்பிரதாய பிரகாரம் இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அங்கு நிலையுர்தப்பட்ட இராணுவத் தளபதியவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்கள் வரவேற்றதோடு, கஜபா படையணியின் 2 அதிகாரிகள் மற்றும் 48 இராணுவச் சிப்பாயினர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையளித்தனர்.ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அணிவகுப்பு தளபதி மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகியோருடன் இணைந்து வண்ணமயமான உடையுடனான அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.

அடுத்து, இராணுவ பதவி நிலை பிரதானி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி , அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள்,பிரதம பதவி நிலை அதிகாரிகள், ஆலோசகர்கள்,பணிப்பகங்களின் பணிப்பாளர்கள் அவரின் நிலையுயர்வுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் அங்கு உரையாற்றிய பிரதம அதிதியவர்கள் தனது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கு நன்றியினை தெரிவித்ததோடு, நான்கு நட்சத்திர நிலைக்கு உயர்த்தியமைக்காக அதிமேதகு ஜனாதிபதியவர்களுக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.மேலும் உயிருடன் உள்ள மற்றும் மரணித்த தனது கடந்தகால படையினருக்கு ஆழ்ந்த நன்றியினை தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தின் மதிப்பினை மேம்படுத்த மற்றும் மேலும் சிறந்த முறையில் தேசிய கட்டுமாணப் பணிகளில் பங்களிப்பு செய்ய அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.படைகளில் நிலை உயர்வு என்பது நம்பிக்கை மற்றும் கடின உழைப்பை ஒப்புக்கொள்வது மட்டுமல்ல, இலங்கை இராணுவம் தொழில்முறை நிறுவனமாக வளர்ந்து வருவதற்கும் இது ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக அமைகிறது என்பதற்கு இது சான்றாகும் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். Authentic Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos