31st December 2020 17:40:41 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் முப்படை சேனாதிபதி ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ அவர்களினால் மேலும் ஐந்து சிரேஸ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
59 வது படைப்பிரிவு தளபதி இலங்கை பீரங்கி படையின் பிரிகேடியர் மனோஜ் லமஹேவா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி இலங்கை பீரங்கியைச் சேர்ந்த பிரிகேடியர் அஜித் திசாநாயக்க, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி கஜபா படையின் பிரிகேடியர் தம்மி ஹெவகே, உளவியல் பணிப்பக பணிப்பாளர் இலங்கை பீரங்கி படையின் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன இராணுவ தலைமையக பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கெமுனு ஹேவா படையின் பிரிகேடியர் லால் சந்திரசிரி ஆகியோர் இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர். affiliate link trace | Sneakers