Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2020 18:06:02 Hours

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திலுள்ள சிலை திறந்து வைப்பு

பேராதெனியவிற்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ள முருத்தலாவ நெல்லிகலயில் உள்ள சர்வதேச பௌத்த நிலையத்திற்கு பௌர்ணமி போயா நாளன்று (29) பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் விஜயத்தை மேற்கொண்டார். அங்கு சென்ற அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் நெல்லிகல புனித வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கடவுள் சமனின் சிலையினை திறந்து வைத்தார்.

அதன் தற்போதைய பிரதம தேரர் வென் வதுரகும்புரே தம்மரதன தேரர் அவர்களின் அழைப்பனை ஏற்று ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது துணைவியாரும் இராணுவ சேவா வனிதா பிரிவு தலிவியுமான திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் மல்வத்த அஸ்கிரிய, அமரபுர, ரமங்கன பீடங்களின் தேரர்கள் உட்பட பல பௌத்ததேரர்கள் மற்றும் பிற அனைத்து பிரிவினர்களும் கலந்து கொண்டனர்.

சிலையை திறந்து வைத்த பின்னர் மல்வத்த பீடத்தின் (சியம் நிகய) பிரதி தலைவரான வென் திவல்கும்புர விமலதம்ம அனு நாயக தேரர் அவர்கள் தொற்றுநோயின் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மேற்கொண்ட அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி பதவி உயரத்தியமைக்கு ஜனாதிபதிக்கு தனது பெரும் நன்றியை தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி அவருக்கு எவ்வாறு பதவி உயர்வு அளித்தார் மற்றும் அவரை இராணுவத் தளபதியாக நியமித்தார் என்பதையும் தெரிவித்தார். இந்த புனித வளாகத்தை நிறுவிய 6 வது ஆண்டு நிறைவையொட்டி வென் வதுரகும்புரே தம்மரதன தேர்ரால் ஸ்தாபிக்கப்பட்ட புனித ஸ்தலத்தில் ஆகாயத்தில் இருந்து பூக்கள் தூவலிற்கு மத்தியில் சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் புதிய சிலையின் சிற்பிகளான ரொஷான் ஹேமவீர மற்றும் தினேஷ் ஹேமவீர ஆகியோருக்கு பாராட்டு நினைவுச் சின்னங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளையும் வழங்கினார்.சபரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ டிக்கிரி கோபேகடுவ, ஸ்ரீ தலதா மாலிகாவ, தியவதன நிலமே, திரு பிரதீப் நிலங்க தெல பண்டார மற்றும் அழைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Buy Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov