Header

Sri Lanka Army

Defender of the Nation

28th December 2020 08:03:38 Hours

57 வது படைப்பிரிவில் இடர் முகாமைத்துவ பொறிமுறை குறித்த கலந்துரையாடல் கட்டம் 3

57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபாவின் வழிகாட்டுதலின் பேரில் 571 வது பிரிகேட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சி 57 வது படைப்பிரிவு தலைமையகத்தில் இடர் முகாமைத்துவ பொறிமுறை குறித்த கலந்துரையாடல் கட்டம் மூன்று 2020 டிசம்பர் மாதம் 24 திகதி நடைபெற்றது.

மாவட்ட இடர் முகாமைத்துவ அரச அதிகாரிகளுடன் இடர் முகாமைத்துவம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 57 படைப்பிரிவின் கள தளபதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டிருந்தது.

572 வது பிரிகேட் தளபதி கர்ணல் நிஷாந்த முத்துமால 57 படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள்,மற்றும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு எம்.கோகுலராஜா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். best Running shoes brand | GOLF NIKE SHOES