Header

Sri Lanka Army

Defender of the Nation

26th December 2020 13:50:58 Hours

7 வது இலங்கை சமிக்ஞை படையணியினால் புதிய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு கௌரவ மரியாதை

தியத்தலாவையிலுள்ள 7 வது இலங்கை சமிக்ஞை படையணியானது, புதிதாக இராணுவ பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்ட்டுள்ள இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களுக்கு 2020 டிசம்பர் 20 ஆம் திகதி வரவேற்பளித்தது.

அங்கு வருகையினை மேற்கொண்ட பிரதம அதிதியவர்கள்,நிலைய தளபதி கேணல் அசோக்க குணசேகர,கேணல் டிலந்த பெர்னாண்டோ மற்றும் பிரதி நிலைய தளபதி ஆகியோரை, 7 வது இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.ஆர் ஹமீம் அவர்கள் வரவேற்றார். இராணுவ சம்பிரதாய முறையின் பிரகாரம் பிரதம அதிதியவர்களுக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

அன்மையில் நடைபெற்றுவரும் படையணியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கட்டளை அதிகாரியவர்கள் பிரதம அதிதியவர்களுக்கு விளக்கமளித்தார்.

பின்னர், படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவ பதவி நிலை பிரதானியவர்கள், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் முகமாக, சமிக்ஞை படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரமனிதெமடன்பிட்டிய மற்றும் சமிக்ஞை படையணியின் சேவா வனிதா பிரிவின் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றிய புத்தக விணியோக நிகழ்விலும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன மற்றும் இலங்கை இராலணுவ கல்லூரியின் நிருவாக பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜி.சி.வி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைத்து படையினருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துசாரத்தில் கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்கள் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினருடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் அணிவகுப்பு மைதானத்திற்கு முன்னால் நா மரக்கன்றினையும் நட்டார்.

பின்னர் அவர் அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களையும் எழுதியதோடு, அதிகாரிகள் உணவக அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு விருந்துபசாரத்தில் அனைத்து அதிகாரிகளுடன் கலந்து கொண்டார்.latest Nike Sneakers | Sneakers