Header

Sri Lanka Army

Defender of the Nation

26th December 2020 18:50:58 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் ஒட்டுச்சுட்டான் பகுதி ஏழைக் குடும்பங்களுக்கு புதிய கட்டில்கள் மற்றும் மெத்தைகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 643 வது பிரிகேட்டின் படையினர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் காட்சி மற்றும் நிகழ்த்து கலை பீடத்தின் அனுசரனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்தின் இடது கரையினை சூழ உள்ள ஏழை குடும்பங்களுக்கு படுக்கைகள் மற்றும் மெத்தைகளை வியாழக்கிழமை (24) அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து வழங்கினர்.

643 வது பிரிகேட்டின் தளபதி கர்ணல் கே.டி. பி டி சில்வா அவர்களின் ஒருங்கிணைப்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் நன்கொடையாளர்களிடம் இருந்து ததியமலை, முத்துவிநாயகபுரம் மற்றும் முத்துஐயன்கட்டு ஆகிய இடங்களின் ஏழைக் குடும்பங்கள் அந்த நிவாரணங்களை பெற்றுக் கொண்டனர்.

64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் பல்லவலா, 641 மற்றும் 643 வது பிரிகேட் தளபதிகளுடன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு நன்கொடைகளை விநியோகித்தார்.

முத்துஐயன்கட்டுக்கான பிரதேச செயலாளர், ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Best Sneakers | adidas Yeezy Boost 700 , Ietp