Header

Sri Lanka Army

Defender of the Nation

26th December 2020 12:20:58 Hours

இராணுவத்தினால் கட்டகாராகு குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

பேசாலை குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 மாணவர்களுக்கு 2021 ஆம் கல்வியாண்டிற்கு தேவையான காலணிகள், பாடசாலை பைகள், முதலுதவி கருவிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இத்தொண்டு திட்டத்திற்கு கொழும்பில் வசிக்கும் சமூக சேவகர் செல்வி ரோஸி துரிங் ரூபா மூன்று இலட்சம் தொகையினை அனுசரனையாக வழங்கியிருந்தார்.

11 வது இலங்கை பீரங்கி படையினரால் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் பிரிகேடியர் அனுராத செனவிரத்ன, 543 வது பிரகேட் தளபதி மற்றும் 11 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி பெற்றோர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

543 வது பிரகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது இலங்கை பீரங்கி படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 2020 டிசம்பர் மாதம் 19 த் திகதி விநியோகத்தில் இணைந்து கொண்டனர்.Mysneakers | AIR MAX PLUS