26th December 2020 10:20:58 Hours
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கேணல் முஹம்மது சப்தார் கான் அவர்கள் 2021 மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட இருதரப்புbilateral ‘Exercise Shake Hands - 1’ தொடர்பான முன் ஏற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக சாலியபுரயில் உள்ள கஜபா படையணி தலைமையகத்திற்கு திங்கள் (21) தனது விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு வருகையினை மேற்கொண்ட பாதுகாப்பு இணைப்பு அதிகாரி , பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்களுடன் இணைந்து பயிற்சிக்காக முன்மொழியப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இராணுவ படையினரின் பங்களிப்புடன் இந்த பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவை மேலும் மேம்படுகிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் வீரர்களை தங்க வைக்கக்கூடிய படையணி வளாகத்திலுள்ள உத்தேச விடுதியினையும் பார்வையிட்டார். அதன்பிறகு மார்ச் மாதம் பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிகவெவ எயார் மொபைல் பயிற்சி பாடசாலைக்கு களப்பயணத்தினை மேற்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி கஜபா படையணியில் இணைய வழி (WEBINAR) மாநாட்டில் ஸ்டியரிங் குழுத் தலைவரும் 21 வது படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, காலாட்படை பணிபாளர் நாயகம் பிரிகேடியர் சிறிநாத் ஆரியசிங்க, இலங்கை சமாதான ஒத்துழைப்பு பயிற்சி நிறுவன தளபதி பிரிகேடியர் சஞ்ஜய பெர்னாண்டோ, 533 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த ஜயசுந்தர , கஜபா படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம ,பாகிஸ்தான் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கேணல் முஹம்மது சப்தார் கான், 583 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி.டி.சூரியபந்தர, 12வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜினேந்ர குணவர்தன , 3 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி சமீர அம்பகாதுவ மற்றும் விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த மாநாட்டில் இரு நாடுகளின் உறுப்பினர்கள் Exercise Ex-Shake Hands -1 இனை வெற்றிகரமாக நடத்துவது குறித்த தங்கள் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர். குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு நிலைய தளபதி மற்றும் படையணியின் அனைத்து பதவி நிலை அதிகாரிகளும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.Sports Shoes | Nike Shoes