24th December 2020 23:25:20 Hours
இன்று (26) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 551 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 300 பேர் கொழும்பு மாவட்டம், 37 பேர் களுத்துறை மாவட்டம், 52 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 162 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.
இன்று (26) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36,077 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 27,931 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி 33,018
அதன் பிரகாரம் (26) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,781 ஆகும். அவர்களில் 31,338 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (26) ஆம் திகதி வரை 8,257 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (26) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 771 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (26) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 01 மரணம் பதிவாகியுள்ளது. அவர் அக்றைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர். அந்த வகையில் இன்று காலை (26) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆகும்.
இன்று (26) காலை ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து EY 264 விமான ஊடாக 31 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 33 பயணிகளும் இந்தியாவில் இருந்து UL 1026 விமானம் ஊடாக 58 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 218 விமானம் ஊடாக 17 பயணிகளும் வருகை தந்துள்ளனர். இன்று (26) சீனாவில் இருந்து UL 867 விமானம் ஊடாக 01 பயணியும் மலைத்தீவுகளில் இருந்து UL 102 விமானம் ஊடாக 02 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (26) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,276 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (25) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை ண 14,933 ஆகும். Authentic Sneakers | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp