27th December 2020 12:31:44 Hours
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற வழமையான கிறிஸ்துமஸ் ஆசிரவாத நிகழ்வினை முன்னிட்டு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு - நவ ரத்தக்' திட்டத்தின் கீழ் இராணுவத்தால் மேம்படுத்தப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை சந்தியில் இருந்து இராணுவ தலைமையகத்திற்கு செலும் வீதியின் வழிப்பாதையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரங்களை செவ்வாயக்கிழமை 23 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
விணியோக கட்டளை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களின் வேண்டு கோளிற்கமைவாக ,லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தனது மனைவி, இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இராணுவ தலைமையகத்திற்கு செலும் வீதியின் வழிப்பாதையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரங்களை ஒளிரச் செய்தார். குறித்த அலங்கரிப்பினை தவிர கொவிட்-19 காரணமாக கொழும்பில் எந்தவொரு இடம்திலும் அலங்கரிக்கப்படவில்லை.
இராணுவத் தலைமையகத்தில் வெளியிடப்பட்ட 'இராணுவ வழி முன்னோக்கி வியூகம் -2020-2025 திட்டத்தினையடுத்து, இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவி இணைந்து இராணுவ குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கு ஊக்குவிப்பு மற்றும் அன்பளிப்பு பொதிகளை வழங்கினர். லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் திருமதி சுஜீவ நெல்சன் ஆகியோர் கிறிஸ்துமஸ் பருவத்தில் கண்கவரக்கூடிய வண்ணமயமான உடையணிந்து குறித்த அன்பளிப்புக்களை விநியோகித்தனர்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இராணுவ கிறிஸ்தவ பெல்லோஷிப் ஏற்பாடுகளை மட்டுப்படுத்தியுள்ளது.
தேவையான சுகாதாரத் தரங்களுக்கு ஏற்ப மக்கள் இந்த அலங்காரங்களை கண்டுகளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.Sports brands | Nike nike dunk high supreme polka dot background , Gov