22nd December 2020 19:31:25 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் படையினர் நன்கொடையாளர் ஒரிவரின் நிதியுதவிய்டன் 2020 டிசம்பர் மாதம் 05 ம் திகதி மிஹிந்தலை ராஜமகா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரசங்க மண்டப கட்டிடத்திற்கு புதிய கூரையை அமைக்கத் தொடங்கினர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையத்தின் ஒருங்கிணைப்பில் பெல்மடுள்ளை பின்வட்ட ஜெம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிர்வாக பணிப்பாளர் திரு மஹிந்தலால் பின்வட்ட அவர்களால் இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா திட்டத்தை பொறுப்பான படையினருடன் துவக்கி வைத்தார்.
சுருக்கமான விழாவில் 21 வது படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள் 212 பிரிகேட் தளபதி , பிரிகேட் சிரேஸ்ட அதிகாரிகள், நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Best Sneakers | New Releases Nike