Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2020 13:00:20 Hours

8,818 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர்

இன்று (21) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 594 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 253 பேர் கொழும்பு மாவட்டம், 124 பேர் கம்பஹா மாவட்டம், 62 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 153 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.

இன்று (21) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,586 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 24,859 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 30,527

அதன் பிரகாரம் (20) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,260 ஆகும். அவர்களில் 28,266 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (20) ஆம் திகதி வரை 8,818 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (21) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 715 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (21) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 05 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கொழும்பு 08, கொழும்பு 12, பண்டாரகம, பனாகொடை மற்றும் கொழும்பு 02 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அதன்படி இன்று (21) காலை வரை பதிவான மொத்த கொவிட் 19 மரணங்கள் 176 ஆகும்.

இன்று (21) காலை கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 25 பயணிகளும் சவுதி அரேபியாவில் இருந்து UL 1264 விமானம் ஊடாக 52 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (21) பாகிஸ்தானில் இருந்து UL 184 விமானம் ஊடாக 23 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (21) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 72 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,659 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (20) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 17,233 ஆகும். Sports News | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ