17th December 2020 17:35:23 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 'எக்வ சுரகிமு நெகனஹிர' (கிழக்கை ஒன்றாகப் பாதுகாப்போம்), மற்றும் 'ஏக்வ சுரகிமு பொலன்னருவ' (பொலன்னருவையை ஒன்றாகப் பாதுகாப்போம்) திட்டத்தின் கட்டம் 11 வது கொவிட்-19 காரணமாக அம்பாறை தவிர்ந்த அனைத்து கிழக்கு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை (14) தொடங்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் பரிந்துரையின் பிரகாரம் இராணுவத்தினால் தொடங்கப்பட்ட குறித்த திட்டத்தில் குறித்த பகுதிகளில் உள்ள சமூகத்தின் பங்களிப்போடும், 22 மற்றும் 23 வது படைப் பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பிரிவுகள் ஆகியவற்றில் சேவையாற்றும் அனைத்து படையினரின் ஒத்துழைப்போடும் சுற்றுச்சூழல் தூய்மை, பொது உணர்வு மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான பொது விழிப்புணர்வு திட்டங்கள், ஸ்டிக்கர் ஒட்டுதல் பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல் விழிப்புணர்வு நிகழ்வானது நடாத்தப்படுகிறது.
அனைத்து சமூகங்கள், அரச, தனியார் துறை மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்போடு இராணுவத் தலைமையக திட்டத்தின் பொறுப்பை செயல்படுத்தலை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னருவை பகுதிகளின் பிரதான வீதிகளை சுத்தம் செய்தல் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து திங்கள்கிழமை (14) பகல் நடத்தப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தொடங்கப்பட்ட கிழக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்த பரந்த அடிப்படையிலான விழிப்புணர்வு திட்டம் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, முதன்முதலில் கிழக்கில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது கட்டம் 1 திட்டத்தின் கீழ் 2020 செப்டம்பர் 29 ஆம் திகதி நடைபெற்றது. வீதியோரங்களில் குப்பைகளை குவித்து வைப்பதில் இருந்து விலகி இருக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் முகமாக பஸ் பயணிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. முக்கிய மத பிரமுகர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி , 22, 23 மற்றும் 24வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி ,சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு கட்டங்களில் தங்களது பங்களிப்பினை வழங்கினர்.Sports brands | Sneakers