Header

Sri Lanka Army

Defender of the Nation

18th December 2020 17:00:33 Hours

இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன புதிய தளபதியின் கடமை பொறுப்பேற்பு நிகழ்வு

இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் சஞ்ஜீவ பெர்ணான்டோ அவர்கள் வியாழக்கிழமை 17 ஆம் திகதி தனது கடமையை இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

அங்கு வருகை தந்த புதிய தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறையின் பிரகாரம் இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. பின்னர் அவர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொணடார். மேலும் அங்கிருந்த ஏனைய அதிகாரிகள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரிகேடியர் சஞ்ஜீவ பெர்ணான்டோ அவர்கள் இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பயிற்சி நிறுவனத்தின் 13 வது தளபதியாவார். பின்னர் அவர் வளாகத்தில் இலுப்பை மரக்கன்றினையும் நட்டார்.

இராணுவத் தலைமையகத்தில் தற்பொழுது நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் ஷாந்த ரணவீர அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அவருக்கு வாழ்துக்களை தெரிவித்தனர்.Sports Shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp