Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2020 00:40:29 Hours

பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக புதிய பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அதிகாரவாணையினை கையளிப்பு

தியதலவ இலங்கை இராணுவ கல்லூரியின் 95 ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன சனிக்கிழமை (19) கலந்துக்கொண்டார். இதன்போது 187 பயிலிளவல் அதிகாரிகள் வாழ்த்துக்கள் மத்தியில் வெளியேறினர்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ கல்வியற் கல்லூரி அணிநடை மைதானம் அன்றைய நிகழ்வுக்கு ஏற்றவாறு பல வர்ண இராணுவக் கொடிகளை பறக்கவிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலில் அணிவகுப்பு கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.ஏ. ரணவக்க ( இலங்கை லைட் காலாட் படை) பிரதம அதிதியிடம் நடவடிக்கைகளைத் முறையான அனுமதியினை கோரினார்.

அணிவகுப்பின் முறையான மறுஆய்வுக்குப் பின்னர் முப்படை சேனாதிபதி சார்பாக பிரதம அதிதி மிகவும் மதிப்புமிக்க ஜனாதிபதியின் அதிகாரவணைக்கான வாள்களை பயிலிளவல் அதிகாரிகளுக்கு வழங்கினார், வண்ணமயமான புதிய அதிகாரிகளிடமிருந்து கௌரவத்தை பெறுவதற்கு முன்பு நிரந்தர படை பயிலிளவல் அதிகாரி பாடநெறி 88 , 88 பிராவோ, (கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகழக பாடநெறி 32,33,35), 89, 90 , நிரந்தர படை பெண் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 18, தொண்டர் படை பெண் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 18 ஆகியவற்றின் அதிகாரிகள் 187 பேருக்கு அதிகாரவணை நிலைக்கான சின்னங்கள் சூட்டப்பட்டது. இந்த வர்ணமயமான மற்றும் கண்ணியமான விழாவில் முப்படையின் சிரேஸ்ட அதிகாரிகள், ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள், வெளிநாட்டு தூதர்கள், பயிற்றுநர்கள், பெற்றோர்கள், உறவினர்களுக்கு மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

பிரதம விருந்தினரை இராணுவ கல்வியற் கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி பிரிகேடியர் கிருஷந்த ஞானரத்னவும் இணைந்து அணிநடை மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

உயிர் நீத்த போர்வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் முகமாக போர்வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தி ஒரு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசபக்தி கீதங்கள் ஒலிக்க பிரதம விருந்தினர் பட்டதாரிகளுக்கு அலங்கார அதிகாரவாணை வாள்களை வழங்கினார். இலங்கை இராணுவத்தில் முறையாக நியமிக்கப்பட்டதன் அடையாளமாக புதிதாக பட்டம் பெற்ற அந்த அதிகாரிகள் அன்றைய பிரதம விருந்தினருக்கு கௌரவம் செலுத்தினர். ஒவ்வொரு பாடநெறியிலும் சிறந்த சாதனையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், நிரந்தரப் படை பாடநெறி இலக்கம் 88 இல் 51 பயிலிளவல் அதிகாரிகளும், நிரந்தரப் படை பாடநெறி இலக்கம் 88 பிராவோவில் 119 பயிலிளவல் அதிகாரிகளும் (கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 32,33,35 பாடநெறிகள்), நிரந்தரப் படை பெண் பயிலிளவல் பாடநெறி 18 இல் 17 படை பெண் பயிலிளவல் அதிகாரிகளும் இவ்வாறு தங்கள் அதிகாரவாணையை பெற்றனர். அவர்கள் முறையாக லெப்டினன்ட்களாக தீவு முழுவதும் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

அணிநடை மரியாதை நிறைவடைந்தவுடன் சீன இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் அன்றைய புகழ்பெற்ற விருந்தினர்கள் வீரமிகு இளம் அதிகாரிகளின் தோள்களில் ஜனாதிபதி அதிகாரவாணையின் அடையாளம் அணிவிக்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வுகளின் இறுதியில் அன்றைய பிரதம விருந்தினருக்கு ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள் பின்வருமாறு:

நிரந்தர படை பயிலிளவல் அதிகாரி பாடநெறி 88

சிறப்பு தகுதி விருது

Bn / U / O S.M துடுவஹேனகே

நிரந்தர படை பயிலிளவல் அதிகாரி பாடநெறி 88 பி

சிறப்பு தகுதி விருது

Pl / U / O R.M.T.G.P ரத்நாயக்க

நிரந்தர படை பெண் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 18

சிறப்பு தகுதி விருது

Pl / U / O K.S.M விஜேவீர

நிரந்தர படை பயிலிளவல் அதிகாரி பாடநெறி 88

சிறந்த சகலதுறை பயிலிளவல் அதிகாரிகான வாள் கௌரவம்

Bn / U / O S.M துடுவஹேனகே

நிரந்தர படை பயிலிளவல் அதிகாரி பாடநெறி 88 பி

சிறந்த சகலதுறை பயிலிளவல் அதிகாரிகான வாள் கௌரவம்

Pl / U / O H.R.B அலஹாகோன்jordan release date | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth