19th December 2020 17:52:35 Hours
முந்தைய மாலை (18) ஒரு குழுவாக தீர்மானம் எடுக்க்க்கூடிய தொழில்சார் தகுதி வாய்ந்த இராணுவ கல்வியற் கல்லூரியின் இளநிலைப் பட்டதாரி அதிகாரிகளின் வழக்கமான இறுதி விளக்கக்காட்சி முன்வைப்பு அரசு மற்றும் அதன் பங்குதாரர்களின் கொவிட் 19 க்கு எதிரான வெற்றிகரமான செயற்பாடு எனும் தலைப்பில் பிரதம அதிதியான செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் முன்னிலையில் இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன இலங்கை நற்புறவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அன்றைய நிகழ்ச்சி நிரலில் ஒரு புதிய அம்சமாக இராணுவ கல்வியற் கல்லூரியின் “எஸ்.எல்.எம்.ஏ ஜர்னல்” எனும் நூல் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதிகள் பிரதம விருந்தினர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியினால் வழங்கப்பட்டது.
புகழ்பெற்ற ஓய்வுபெற்ற இராணுவ கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட அதிகாரிகள், சேவையிலுள்ள சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். Adidas shoes | UK Trainer News & Releases