Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2020 10:06:27 Hours

மேலும் 708 பேர் முழுமையாக சுகமடைந்தனர்

இன்று (19) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 662 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 259 பேர் கொழும்பு மாவட்டம், 164 பேர் களுத்துறை மாவட்டம், 79 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 158 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.

இன்று (19) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,376 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 23,653 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 29,317

அதன் பிரகாரம் (18) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 36,048 ஆகும். அவர்களில் 27,060 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (18) ஆம் திகதி வரை 8,823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (19) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 708 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (19) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 05 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் அகலவத்தை, மக்கோன, கொழும்பு 15, மாஹரகம மற்றும் வத்துபிட்டிவல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். அதன்படி இன்று (19) காலை வரை பதிவான மொத்த கொவிட் 19 மரணங்கள் 165 ஆகும்.

இன்று (19) காலை அரபு இராஜ்சியத்தில் இருந்து EY 264 விமான ஊடாக 35 பயணிகளும் மலேசியாவில் இருந்து UL 320 விமானம் ஊடாக 14 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 37 பயணிகளும் இந்தியாவில் இருந்து UL 1026 விமான ஊடாக 55 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 218 விமான ஊடாக 82 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (19) சீனா இருந்து UL 867 விமானம் ஊடாக 05 பயணிகளும் ஓமானில் இருந்து WY 373 விமான ஊடாக 50 பயணிகளும் ஜெர்மனியில் இருந்து UL 554 விமான ஊடாக 03 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (19) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 78 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,837 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (18) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 15,286 ஆகும். Nike footwear | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov