Header

Sri Lanka Army

Defender of the Nation

18th December 2020 07:00:44 Hours

21வது படைப்பிரிவின் 212 வது பிரிகேட்டின் படையினர் எலயப்பத்துவ வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு தேவைகளுக்கு பங்களிப்பு

தம்மென்னாவ எலயபத்துவ கிராம வைத்தியசாலைக்கு தொலைதூரத்தில் இருந்து சுகாதார வசதிகளுக்காக வருகை தரும் நோயாளிகளின் நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டு வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 21வது படைப்பிரிவின் 212 வது பிரிகேட்டின் 9 வது பொறியியலாளர் சேவைப் படை மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படை படையினர் ஆஸ்திரேலியாவில் வாழும் மூன்று இலங்கை நன்கொடையாளர்களின் நிதியின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட நோயாளி காத்திருப்பு மண்டபம் மற்றும் பாதை ஆகியவற்றை சமீபத்தில் எளிய விழாவின் ஊடாக நோயாளிகள் பாவனைக்கு விடப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 212 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் 21 வது படைப்பிரிவின் சில சிரேஸ்ட அதிகாரிகள், 5வது தேசிய பாதுகாவல் படை கட்டளை அதிகாரி, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் திருமதி ஷமலீ வீரசிங்க, திரு சிறிசேன ஜெயரத்ன மற்றும் திரு. லக்கி ஜெயரத்ன ஆகியோர் இந்த வசதிகளை நிர்மாணிக்க நிதியுதவி செய்தனர்.Nike Sneakers Store | nike fashion