Header

Sri Lanka Army

Defender of the Nation

18th December 2020 11:00:44 Hours

எயார் மொபைல் பிரிகேட் தளபதியின் கடமை பொறுப்பேற்பு நிகழ்வு

வவுனியா வெள்ளங்குளத்திலுள்ள எயார் மொபைல் பிரிகேட் தலைமையகத்தின் 22 வது தளபதியாக கேணல் சுபாத் சஞ்ஜீவ அவர்கள் தனது கடமையை மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை 17 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொணடார்.

எயார் மொபைல் பிரிகேட் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் பதவி நிலை அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டதோடு, 12 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கேணல் சுபாத் சஞ்ஜீவ அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேணல் சுபாத் சஞ்ஜீவ அவர்கள் குறித்த நியமனத்திற்கு முன்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

பின்னர் ,தேநீர் விருந்துபசார நிகழ்வுகள், மர நடுகை மற்றும் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் மத்தியிலான உரையாற்றல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் கட்டளை அதிகாரி மற்றும் படைப் பிரிவில் சேவையாற்றுபவர்கள் கலந்து கொண்டனர்.

கேணல் சுபாத் சஞ்ஜீவ அவர்கள் தற்பொழுது சாலியபுரயிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தின் நிலைய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறப்பிடத்தக்கவிடயமாகும். Sport media | NIKE HOMME