Header

Sri Lanka Army

Defender of the Nation

17th December 2020 16:54:30 Hours

வெளிநாட்டு பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையில் உள்ள வெளிநாட்டு பாதுகாப்பு இணைப்பு தூதுக்குழுவினர் அவர்களின் துணைவியர்கள் மற்றும் பிள்ளைகளுடன் வடக்கிற்கு சுற்றுப்பயணத்தை மேற் கொண்டதோடு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கும் 2020 டிசம்பர் 14 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டனர்.அங்கு விஜயத்தினை மேற்கொண்ட அவர்களை வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

பாதுகாப்பு இணைப்பு தூதுக்குழுவினர் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த சந்திப்பில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் இராணுவ நடன குழுவினரால் கலாச்சார இசை நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. மேலும் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வு மற்றும் தேநீர் விருந்துபசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. பின்னர் அவர்கள் திருகோணமலைக்கு செல்ல முன்னர் அவர்களுக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரப்பட்டன.

குறித்த சந்திப்பின் போது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை பிரிகேடியர் நலின் கொஸ்வத்த, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் கேஎம்வி கொடித்துவக்கு ,மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth