17th December 2020 17:14:56 Hours
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் 8 வது தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்கள் தனது கடமையை புதன்கிழமை 16 ஆம் திகதி சபுகஸ்கந்தயிலுள்ள பாதுகாப்பு சேவைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி வளாகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
வருகை தந்த தளபதிக்கு படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரதி கட்டளைத் தளபதி பிரிகேடியர் தர்ஷன விஜேசேகர , பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் லலித் ஹேரத் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் அனைத்து பிரிவு தலைமையினாலும் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் கல்லூரியின் நீரூற்று சதுக்கத்தில் நாக மரக்கன்றினை நட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதவிதாரிகள் மற்றும் மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில் , ஒரு சாத்தியமான பணிச்சூழலை உறுதி செய்வதில் எங்கள் வகிபாகத்தின் முக்கியத்துவம் மற்றும் கூட்டு இடை-சேவைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான செயல்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கும் பொறிமுறை மற்றும் பாதுகாப்பு இராணுவத்துடன் அதன் முக்கிய உறவு பற்றிய புரிதலுடன் கட்டளை செயல்பாடுகள் மற்றும் பணியாளர் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான கலை தொடர்பாக மாணவ அதிகாரிகளுக்கு கற்பிப்பதிலுள்ள எங்கள் முதன்மை பொறுப்பு தொடர்பாக குறிப்பிட்டார்.
மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்கள் தனது குறித்த பதிவியினை பொறுப்பேற்பதற்கு முன்னர் இராணுவ தலைமையகத்தின் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக சேவைபுரிந்தார். தற்பொழுது 56 வது இராணுவ பதவி நிலை பிரதானியாக கடைமையை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Nike shoes | Nike - Shoes & Sportswear Clothing