Header

Sri Lanka Army

Defender of the Nation

17th December 2020 20:37:28 Hours

யாழ்பாணத்தில் கைவிடப்பட்ட குளம் இராணுவத்தினரால் புனரமைத்தமைக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவிப்பு

யாழ்பாண வட்டுக்கோடையில் உள்ள இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட 'உப்பு வயல்குலம்' என்று பெயரிடப்பட்டுள்ள விவசாய குளமானது, 17 ஆம் திகதி காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இராணுவத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் திறன் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்கான அதன் மக்களுடனான நட்புசார்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வளர்ந்து வரும் பொது ஆர்வம் மற்றும் நம்பிக்கை, இராணுவம் மற்றும் இராணுவத் தளபதியின் அர்ப்பணிப்பு ஆகியவற்றினை தென்மேற்கு வட்டுக்கோடை விவசாய சம்மேளனம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ப்ரெண்ட்ஸ் ஆஃப் யாழ்ப்பாணத்தின் தலைவருமான டொக்டர் சிதம்பரன் மோகன் அவர்கள் குறித்த குளத்தின் திறப்பு விழாவின் போது பகிரங்கமாக பாராட்டினார்.

சிவில்-இராணுவ ஒற்றுமையின் மற்றொரு மைல்கல்லாகவும், இப்போது யாழ்ப்பாண தீபகற்பத்தில் வேரூன்றியுள்ள நல்லிணக்கத்தின் பிணைப்புகளாகவும், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 513 வது பிரிகேட் படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் மற்றும் 51 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் ஆகியோரின் மேற்பார்வையில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 10 வது கள இலங்கை பொறியியலாளர்கள் படையணி மற்றும் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் படையினர் உப்பு வயல்குளத்தினை மறுஅகழ்வு செய்ததோடு அதனை புதுப்பித்தனர்.

இராணுவத் தளபதி குளத்தின் பெயர் பலகையை திறந்து வைத்த பின்னர், சமூக இடைவெளி நடைமுறைகளை கடைப்பிடித்து, டொக்டர் சிதம்பரன் மோகன் தலைமையிலான விவசாயிகள், அன்றைய பிரதம விருந்தினரான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இணைந்து திட்டத்தின் கட்டடக்கலைஞர் டொக்டர் சிதம்பரன் மோகன் அவர்களினால் இந்திய கங்கை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை மீண்டும் தோண்டப்பட்ட குளத்தில் ஊற்றி அதனை புனிதப்படுத்தினர்.

பல வருடங்களுக்கு முன்பு, குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்வளம் காணப்பட்டது. பின்னர் அது கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதோடு, நீர் தக்கவைப்பு திறன் குறைதல், மழை பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களால் அதன் அடிப்பகுதி வறண்ட நிலையில் காணப்பட்டது . ‘தியாஹி நற்பணி மன்றத்தின்’ தலைவர் திரு வாமதேவா தியாகேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி அனுசரணையில், வட்டுக்கோடை பகுதியில் உள்ள சிரமப்படும் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய குறித்த புனரமைப்பு திட்டத்தை இராணுவம் முன்னெடுத்தது.புதுப்பிக்கப்பட்ட குறித்த குளத்தில் இருந்து 4000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்வளம் கிடைக்கும் அதே வேளை 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.

இந்நிகழ்ச்சியில் டொக்டர் சிதம்பரன் மோகன் ஆற்றிய தனது சுருக்கமான உரையில், இராணுவத்தின் சமூக ஒத்துழைப்பு, கட்டுமானம், மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் பிற நலன்புரி பணிகளை பகிரங்கமாக பாராட்டினார். "இராணுவத்தின் சேவைகளை, குறிப்பாக இராணுவத் தளபதியின் பங்களிப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, பேரழிவுகளின் போது அப்பாவி மக்களை மீட்பது மற்றும் வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் , வீடுகளை வழங்குவது உள்ளிட்ட அர்பணிப்பு சேவைகளை முழு மனதுடன் நான் பாராட்டுகிறேன், மற்றும் வடக்கு மக்கள் துயரத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்களின் அனைத்து வகையான நலன்களும், வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள், கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் பணி போன்ற விடயங்களை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், மேலும் உங்கள் அனைத்து முயற்சிகளிலுக்கும் நாங்கள் பிராத்திக்கிறோம்"என்று அவர் மேலும் கூறினார். வடக்கிலும் இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகி வருவதனால் நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க டொக்டர் மோகன் அவர்கள் இராணுவத் தளபதியிடம் ஒத்துழைப்பினை கோரினார்.

டொக்டர் சிதம்பரன் மோகனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முகமாக, யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் விவசாய மேம்பாட்டு சபையின் உதவி ஆணையாளர் திரு இ.நிஷாந்த் வாலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பிரேமணி பொண்ணம்பலம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு கே மகேஷன் ஆகியோரின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் சில வாரங்களுக்குள் இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த குளத்தினை புதுப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் மத பிரமுகர்கள், யாழ் மாவட்ட செயலாளர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு எஸ்.பாலசந்திரன், 51, 52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள், மேலதிக பிரதேச செயலாளர் (காணி) யாழ்ப்பாணம், வாலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், விவசாய மேம்பாட்டுத் திணைக்கள துணை ஆணையாளர், விவசாயிகள், பொதுமக்கள், இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த குளமானது முற்றிலும் வறண்டு, தேக்கமடைந்து, மண்ணினால் நிரம்பி காணப்பட்டதோடு மற்றும் மழை நீரின் முழுத் திறனையும் தக்க வைத்துக் கொள்ள முடியுமான திறன் காணப்படாமை மற்றும் ஆண்டு முழுவதும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் விவசாய திட்டங்களுக்கு மிகவும் தேவையானதால் படையினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் அவர்கள் தங்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி விவசாய மேம்பாட்டுத் திணைக்களம் உட்பட அந்தந்த அனைத்து அரச நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து திட்டத்தை பூர்த்திசெய்தனர்.

இன்று காலை குளத்தின் அருகே இடம்பெற்ற சுருக்கமான விழாவின் போது, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புனரமைப்பு தொடர்பான ஆவணங்களை முழு புதுப்பித்தல் திட்டத்திற்கும் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிய விவசாய மேம்பாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறித்த குளத்தின் மூலம் சங்கனாய் பிரதேச செயலகத்தில் உள்ள 600 குடும்பங்கள் பயன் பெறலாம் , மேலும் 4000 ஏக்கரிற்கும் மேல் நெல் பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். "இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது அவர்களுக்கு தேவையான வேறு எந்தவொரு விஷயத்திற்கும் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும். சமீபத்திய வெள்ளம் மற்றும் 'புரேவி' சூறாவளியின் போது அவர்களினால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து வழங்கினர்.அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனம் அல்லது தனிநபர் அனுசரணையுடன் யாழ்பாணத்தில் யாழ் படையினர் இதுவரை வரிய குடும்பங்களுக்காக 740 புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பிரதான பொறுப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பகுதியாகக் கருதி அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்படும்.இங்குள்ள சில பெற்றோர்கள் கேட்டுக் கொண்டபடி, எதிர்காலத்தில் யாழ்ப்பாண இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் தடுப்பதற்கும் நாங்கள் உதவுவோம், ”என்று அவர் விரிவாகக் கூறினார். நாட்டில் உள்ள கொவிட் -19 தொற்றுநோய் குறித்த நிலைமை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தர்.

டொக்டர் சித்தம்பரன் மோகன் மற்றும் அரச அதிகாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம், சில மாதங்களுக்கு முன்பு, இதே முறையில், படையினர் பாலாலியில் கைவிடப்பட்ட ‘ரவிந்து வாபி’ குளத்தினை முற்றிலுமாக புனரமைத்து பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.Sport media | Releases Nike Shoes