Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2020 12:01:03 Hours

66 வது படைப்பிரிவு அதன் சாதனைகளை நினைவுப்படுத்துகிறது

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் 2020 டிசம்பர் மாதம் 10 ம் திகதி தனது 11 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, 2008 நவம்பர் 15ம் திகதி 58வது படைப்பிரிவு பூநகரின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தை கைப்பற்றிய பின்னர், 66 வது படைப்பிரிவு தலைமையகம் 2009 நவம்பர் மாதம் 09 திகதி அதிரடி படை 6 ஆக உயர்த்தப்பட்டது, மேலும் இது பின்பு 2009 டிசம்பர் மாதம் 10ம் திகதி 66 வது காலாட்படைப் பிரிவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக வளாகத்தில் படைப் பிரிவு தளபதி மரக்கன்று உன்றினை நாட்டியதோடு தொடர்ந்து அனைத்து படையினருக்கு உரையாற்றினார்.

நிகழ்வு சிற்றுண்டி மற்றும் அனைத்து நிலைகளுக்கான மதிய உணவுகளுடன் நிறைவிற்கு வந்தது Sneakers Store | balerínky