Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2020 13:09:29 Hours

ஏழு தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான சுற்றுப் பயணம் மேற்கொண்ட கொழும்பை தளமாகக் கொண்ட ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புத் தூதுக்குழுக்கள் யாழ்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் அழைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை (13) யாழ் குடா நாட்டில் சந்தித்து பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட் 19 பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள், பொது பாதுகாப்பு விடயங்கள் மற்றும் சிவில்-இராணுவத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடினர்.

சந்திப்பின் போது மேஜர் ஜெனரல் பண்டார பாதிக்கப்பட்ட தொற்றளர்களை இனங்காணல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக திட்டங்கள், பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பங்களிப்பு, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு நிகழ்வுகள், தேசத்தைக் கட்டமைக்கும் பணிகள் போன்றவற்றை திவுபடுத்தினார். வீடமைப்பு திட்டம் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

சில சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர். best Running shoes brand | FASHION NEWS