16th December 2020 16:08:58 Hours
இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற 55 வது பதவிநிலை பிரதானியும் இலங்கை பொறியாளர் படையின் 17 வது படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன 35 வருட கால இராணுவ சேவையின் ஓய்வு பெறுவதை இட்டு 2020 டிசம்பர் 14 ம் திகதி பனாகொடை படைத் தலைமையகத்தில் சேவைநலன் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.
அவரது சேவையின் இறுதி நாளில் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களை இராணுவ மரபுகளுக்கு இணங்க, நிலையத் தளபதி பிரிகேடியர் மங்கள மாயாதுன்னாவால் அன்புடன் வரவேற்றார். பின்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவர் உயிர் நீத்த படை வீரர்களின் நினைவுதூபிக்கு மலர் செலுத்தினார். தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சிரேஸ்ட சிப்பாய்களின் உணவறையில் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் அவரது வாகனம் வளாகத்திலிருந்து வெளியேறும் போது அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீதி வரிசை மரியாதையுடன் பிரியாவிடை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இலங்கை இராணுவத்தில் 1985 ஜனவரி மாதம் 18 இல் இணைந்துக் கொண்டார். 1986 மே மாதம் 31 ம் திகதி அதிகாரவாணைக்கு நியமிக்கப்பட்டார். . அவரது இராணுவ வாழ்க்கையில் அவர் பல்வேறு கட்டளை பதவிகள், பதவி நிலை நியமனங்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார்.latest Nike release | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ