Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2020 09:30:33 Hours

புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய பதவியேற்பு

இலங்கை சமிஞ்சைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய இன்று (16) இராணுவத் தலைமையகத்தில் மத அனுஸ்டானங்கள் மற்றும் வாழ்த்துக்கள் மத்தியில் 56 வது பதவிநிலை பிரதானியாக பதவியேற்றார்.

மகா சங்க உறுப்பினர்களின் ஆசீர்வாத பிரித் பாராயணத்துடன், மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டி தனது புதிய பதவியேற்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சிரேஸ்ட அதிகாரிகள் பிரதிநிதி கூடி இருந்தனர்.

இந்த புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாக ஆக பணியாற்றி வந்தார். மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டியின் சுருக்கமான சுயவிவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் டி.ஏ. பிரபாத் தெமடன்பிட்டி 1985 ஒக்டோபர் மாதம் 07ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார். இலங்கை இராணுவ கல்லுரியிலும், பாகிஸ்தான் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியிலும் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1986 ஜூலை மாதம் 24ம் திகதி இரண்டாம் லெப்டினன்ட் ஆக அதிகாரவாணையினை பெற்றுக்கொண்டு இலங்கை சமிஞ்சைப் படையில் இளம் அதிகாரியாக நியமிக்கப்பட்டார், பின்னர் 1988 ஒக்டோபர் மாதம் 07 திகதி லெப்டினன்ட் நிலைக்கும் 1990 ஜனவரி மாதம் 11 ம் திகதிக்கு கேப்டன் நிலைக்கும் மேஜர் நிலைக்கு 01 நவம்பர் 1994, மே 10, 2005 இல் லெப்டினன்ட் கேணல் நிலைக்கும் கர்னல் ஆக 31 ஜனவரி 2008 இலும் பிரிகேடியர் ஆக 05 அக்டோபர் 2010 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு 01.11.2016 ம் திகதியும் நிலை உயர்வுகளை பெற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டி தனது 35 ஆண்டு இராணுவ சேவையில் இராணுவத்திலும் படையணி மட்டங்களிலும் பல்வேறு கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்றுவிப்பு நியமனங்களை வகித்துள்ளார். அந்த வகையில் படையணி தலைமையக நிறைவேற்று நிர்வாக அதிகாரி, சமிஞ்சை பயிற்சி பாடசாலை தளபதி, சமிஞ்சை பிரிகேட் தளபதி, பணிநிலை அதிகாரி 1, 03 வது சமிஞ்சைப் படை கட்டளை அதிகாரி , சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி, 23 வது படைப்பிரிவில் கர்னல் பொது பணி, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி சபுகஸ்கந்தவின் தளபதி, 523 மற்றும் 552வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் ஒருங்கிணைப்பாளர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி சபுகஸ்கந்த மற்றும் தகவல் தொழில்நுட்பம் பணிப்பாளர் என்பவற்றை குறிப்பிடலாம். மேலும் அவர் 56வது படைப்பிரிவின் தளபதியாக கட்டையாற்றியுள்ளார். அவர் இராணுவ வுஷு குழுவின் தற்போதைய தலைவராகம் செயற்படுகின்றார்.

மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டி இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி சபுகஸ்கந்தவின் பட்டதாரி ஆவார், மேலும் 2001 ஆம் ஆண்டில் சிறந்த ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்ததற்காக தங்கப்பேனை விருதைப் பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். மேலும், அவர் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பெருமை வாய்ந்த பழைய மாணவர் ஆவார் . மேலும், அவர் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் ஆய்வுகளில் பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுமானியும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் விநியோக சங்கிலி நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றார். மேஜர் ஜெனரல் டி.ஏ.பி.என். தெமடன்பிட்டி என்டியு பிஎஸ்சி புகழ்பெற்ற கொழும்பின் நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். bridge media | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp