Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2020 10:58:21 Hours

தனிமைப்படுத்தப்பட்ட தொடர் மாடி குடியிருப்பு மக்களுக்கு இராணுவம் அத்தியாவசியம் பண்டங்கள்

ஒரு நன்கொடையாளரின் நிதியுதவியுடன் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 142 வது பிரிகேட்டின் 6 வது கெமுனு ஹேவா படையினர் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்குளி தொடர் மாடி குடியிருப்பாளர்களுக்கு வியாழக்கிழமை (10) மாபெரும் உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளிக்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

எலக்ட்ரிகல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திரு சமீரா பிரசாத் முஷூப் தனது நண்பர்களின் ஆதரவோடு 715 உலர்ந்த உணவு பொதிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பொதி செய்யப்பட்ட உலர் உணவு வகைகளை வழங்கினர்.

இராணுவத் தலைமையகத்தின் பணிக் கடமைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மனாத யஹாம்பத் 14வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா ஒருங்கிணைந்து 142 வது பிரிகேட் தளபதியின் இந்த சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டதின் நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்தனர்.

6 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி தனது படையினருடன் விநியோகத்தை திட்டத்தை மேற்கொண்டார்.Running sport media | Yeezy Boost 350 Trainers