13th December 2020 10:51:32 Hours
இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மன்னாரை தளமாகக் கொண்டிருக்கும் 54 வது படைப்பிரிவு படையினர் சனிக்கிழமை (12) மன்னார் பள்ளிமுனையில் சந்தேகத்திற்கிடமான வீட்டைத் சோதனை செய்த போது 1560 கிலோ கடத்தல் மஞ்சளை கைப்பற்றப்பட்டது.
ரூபா 9.3 மில்லியன் மதிப்புள்ள மஞ்சள் தொகையுடன் ஒரு சந்தேக நபரை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதேவேளையில் சுமார் 5.34 மில்லியன் மதிப்புள்ள 890 கிலோ கடத்தல் மஞ்சள் 15 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையினரால் சனிக்கிழமை (12) மாலை குஞ்சுக்குளம் வீதித் தடையில் கைது செய்யப்பட்டது. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில் மன்னரில் இருந்து கல்முனைக்கு லொரியில் மஞ்சளை கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக வாகனம் மற்றும் சந்தேக நபர்கள் மடு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.latest Running Sneakers | jordan Release Dates