Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2020 23:14:59 Hours

இங்கிலாந்து இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகருக்கு முன்னாள் இராணுவ வீரர்கள் பாராட்டு

இங்கிலாந்து இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கம் (SLESPA-UK) சமீபத்தில் லன்டன் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் சுவர்ண போதோட்ட தனது பதவிக் காலம் நிறைவடைந்தமையை இட்டு அவரது சேவையை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து. குறித்த நிகழ்வில் இலங்கையின் அனர்த்தங்களின் போது களத்தில் முன்னின்று சேவையாற்றும் இராணுவத்தின் இடர் முகாமைத்துவ குழுவிற்கு சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் மேதகு சரோஜா சிறிசேனவும் கலந்து கொண்டார்.

இங்கிலாந்து இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் (SLESPA-UK) தலைவர் லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வு ) கபிலா டி அல்விஸ், உதவித் தலைவர் மேஜர் (ஓய்வு) செல்வா சதானந்தன் மற்றும் சில உறுப்பினர்கள் லண்டனில் உள்ள தங்களது அலுவலகத்தில் பிரிகேடியர் போதோட்டாவின் சேவையை பாராட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர். விடைப்பெறும் பாதுகாப்பு ஆலோசகர் அவர்களுக்கு அவரது சேவை காலத்தின் போது தங்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன் சிறப்பு நினைவு பரிசு ஒன்றினையும் வழங்கி அவரது எதிர்கால வாழ்விற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.Sports brands | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov