13th December 2020 10:48:32 Hours
பனாகொடை இலங்கை இராணுவ பொது சேவை படையின் தலைமையகம் புதன்கிழமை (9) இராணுவத் தலைமையகத்தின் சட்ட வல்லுனர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் எட்வர்ட் ஜயசிங்கவிற்கு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குப்பற்றலுடன் பாராட்டு விழாவை நடாத்தியது.
அன்றைய பிரதம விருந்தினரை இலங்கை இராணுவ பொது சேவை படையின் நிலையத் தளபதி கர்ணல் குமார அபேசிங்க பிரதான நுழைவாயிலில் வரவேற்றார். அங்கு அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து நினைவுகளுக்காக புதிய நியமனம் பெற்ற சிரேஸ்ட அதிகாரி அதிகாரிகளுடன் குழு புகைப்படங்களுக்கு தோன்றினார். பின்னர் கோப்ரல்ஸ் உணவரையில் இடம்பெற்ற தேநீர் விருந்தில் பங்குகொண்ட போது ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் புதிதாக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரலுக்கு படைத் தளபதி சார்பாக நிலையத் தளபதி .அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். Nike Sneakers | AIR MAX PLUS