Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2020 22:24:31 Hours

இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் வளாகத்தில் புதிய பட்டறை நிர்மாணித்லும் & புதிய தயாரிப்புக்கள் அறிமுகப்படுத்தலும்

நாட்டிற்குத் தேவையான அந்நிய செலாவணியை ஈட்டுத்தரக்கூடிய அதிநவீன புதுரக உபகரணங்கள், ஆக்கபூர்வமான வன்பொருள் தயாரிப்பு மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றினை தயாரிக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று 12 ஆம் திகதி கொஸ்கமையிலுள்ள இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் வளாகத்தில் (SLEME) அதிநவீன புதிய பட்டறை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார். குறித்த படையணியானது ஏற்கனவே சர்வதேச தரநிலைகளைக் கொண்ட பல புதிய தயாரிப்புகளில் முன்னேற்றத்தினை அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

"கடந்த சில மாதங்களில் இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் (SLEME) மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்கள் உயர் தரமுள்ள புதிய வாகனங்களை தயாரிப்பதில் புதிய முன்னேற்றங்களை அடைந்துள்ளனர், அவற்றில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் பயன்படுத்துவதற்காக ஐ.நா. அங்கீகாரத்தைப் பெற்றுள்ள சில யூனிகார்ன் பஃப்பல் வாகனங்கள் உள்ளடங்கும். சமீபத்தில், அதன் அனைத்து தொழில்நுட்ப உபகரணங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் வாகனங்களை வழங்கி நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான தனது ஒத்துழைப்பினை வழங்கியுள்ளமையானது அதன் திறனையும், இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் தொழிலாளர்கள் வைத்திருக்கும் புதுமையான அறிவையும் எடுத்துக்காட்டுகின்றது. இது உண்மையிலேயே இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் பெருமையை சேர்க்கக்கூடிய ஒரு விடயமாகும், என " அடிக்கல் நாட்டும் நிகழவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதி இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்த பட்டறையானது முன்னர் கொஸ்கமை இராணுவ தொழில் வளாகத்திற்குள் ஒரு சிறிய பகுதியில் செயல்பட்டு வந்தது.

அங்கு வருகையை மேற்கொண்ட பிரதம அதிதியவரகளை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்கள் வரவேற்றதோடு, அவருக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிகப்பட்டது.

4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குறித்த புதிய பட்டறையானது கனரக வாகனங்களை விசாலமாக உற்பத்தி செய்வதற்கு இடமளிக்கும் வகையில் முழுமையாக உருக்கு இரும்பினை பயன்படுத்தி முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது .இப்பைட்டறையானது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் நாட்டில் முப்படையினரின் தேசிய பாதுகாப்பு பணிகளுக்கும் அவசியப்படும் அதேவேளை முப்படைகளிடையே பெரிய பட்டறையாகவும் அவை எதிர்காலத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் திறன் கொண்டது என நம்பப்படுகிறது. இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோண் அவர்கள் புதிய மற்றும் நவீன பாகங்கள், கனமான வாகனங்கள், இராணுவ பயன்பாட்டின் உபகரணங்கள் போன்றவற்றின் மூலம் அந்நிய செலாவணியின் பெரும் தொகையை மிச்சப்படுத்துகின்ற குறித்த திட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்தார்.

ஒரு பழைய இராணுவ ஜீப்பில் இருந்து உருவாக்கப்பட்ட தொலைநிலை கட்டுப்பாட்டு வாகனத்தின் மூலம் அன்றைய பிரதம விருந்தினருக்கு அணிவகுப்பு மைதானத்தில் வைத்து இராணுவ மரியாதை வழஙகப்பட்டது.பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு ஒரு சிறப்பு அணிவகுப்பு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் புதிய பட்டறை வளாகத்தில் ஒரு பலா மரக்ன்றினை நட்டார். மேலும் அவர் புதிய பட்டைறையினை ஆரம்பிக்கும் முகமாக திரைச்சீலையினை நீக்கி கட்டுமாண பணியினை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர், இராணுவத் தளதி தற்போதுள்ள பட்டறை வளாகத்திற்குச் சென்று அங்குள்ள சிறிய ஆயுதப் பிரிவினை திறந்து வைத்தார்.இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் படையினரால் தயாரிக்கப்பட்ட வாகனங்களை (AVLON 6x6, AIMOV 4x4 மற்றும் UniCOLT) இராணுவத் தளபதிக்கு காண்பித்தனர்.AVOLON 6x6 வாகனமானது கேமராக்கள், ட்ரோன்கள், புல்லட் ப்ரூஃப் மற்றும் ஜாம்மர்ஸ் உள்ளிட்ட அதன் அதிநவீன பாகங்களின் உதிவின் மூலம் எந்தவொரு நிலப்பரப்பிலிருந்தும் நிகழ்நேர தகவல்களுடன் செயற்கை நுண்ணறிவை சேகரிக்கும் திறன் கொண்டது.

இந்த வாகனம் ஐ.நா. பயணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் தயாரிப்பிற்கு ஐ.நா. ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இராணுவத் தளபதி படையினர் மத்தியில் உரையாற்றிய பின்னர், மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக அவர்களினால் அன்றைய பிரதம விருந்தினருக்கு நினைவுச் சின்த்தை வழங்கினார். பன்னர் அவர் அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களை எழுதினார். அதன்பின்னர் அவர் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டார்.

மின்சார மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோண் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் நிலைய தளபதி மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர்.Nike footwear | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp