12th December 2020 05:20:12 Hours
அம்பகாம்ம் படை யிற்சி பாடசாலையில் படையின் பயிற்சியினைத் தொடங்கிய 6 வது இலங்கை சிங்கப் படையின் படையினருக்கு 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யப்பா தலைமைத்துவம் மற்றும் ஊக்கமூட்டல் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (8) விரிவுரை நிகழ்த்தினார்.
படையினரின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அமைப்பை நோக்கிய பணி திறனை மேம்படுத்தல் அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்கால சூழலுடன் தொடர்புடைய சூழ்நிலைகளை கையாளுதல் / நிர்வகித்தல் மற்றும் படையினரின் சிந்தனை திறனை மேம்படுத்துவதற்கான நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் அமர்வில் ஆழமாக விவாதிக்கப்பட்டது. படை பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளர், கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள், 06 வது இலங்கை சிங்கப் படையின் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர். affiliate tracking url | Nike Air Max 270