12th December 2020 09:01:55 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் 571 வது பிரிகேட்டின் 10 வது தளபதியாக கர்னல் தம்மிகா வெகெதர மத ஆசீர்வாதம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் புதன்கிழமை (9) பொறுப்பேற்றுக் கொண்டார்.
57 வது படைப்பிரிவின் 571 வது பிரிகேட்டின் புதிய தளபதியை பணி நிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் 7 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கர்ணல் தம்மிக வெலகெதர சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமை ஏற்பிற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் கர்ணல் தம்மிக வெலகெதர நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் பணியாற்றினார்.
நிகழ்வில் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரம், மரக்கன்று நாட்டுதல், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரை என்பன இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிரிகேடியர் கபில டொலகே பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் கர்னல் தம்மிக வெலகெதர இப்பதவிற்கு இப்போது AHQ நியமிக்கப்பட்டுள்ளார். Sports brands | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf