12th December 2020 16:00:32 Hours
35 ஆண்டுகளுக்கு மேலாக ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பொறியாளர் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் தான் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுச் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வியாழக்கிழமை (10) சந்தித்தார்.
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவருக்கு தனது ஆழ்ந்த நன்றியினையும் தெரிவித்தார், மேலும் குறிப்பாக நாடு ஆபத்தில் இருந்தபோது அவரினால் மேற்கொண்ட நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பாகவும் சுட்டிக்காட்டினர்.பின்னர் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நட்பின் அடையாளமாக பல நினைவுச் சின்னங்களையும் அவருக்கு வழங்கினார்.கலந்துரையாடலின் இறுதியில், ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் இராணுவத் தளபதி அவருக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்பிற்கும் தோழமைக்கும் இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான சுயவிவரத்தை இங்கே. மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் ஒரு பழைய மாணவர் , அவர் 1985 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை இராணுவ நிரந்தர படையில் சேர்ந்தார், மேலும் 1986 மே 31 ஆம் திகதி பொறியாளர் படையினருக்கு ஆணைபெற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் இளங்கலை அறிவியல் (Honours) போர் ஆய்வுகள் பட்டப்படிப்பினை பாக்கிஸ்தானின் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்திபூர்த்தி செய்துள்ளார். இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுமானி பட்டத்தினையும் , ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரட்போட் பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்வில் மெரிட் உடனான முதுமானி கலை பட்டத்தினையும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரட்போட் பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்வு மற்றும் அமைதி தயார் நிலையில் மெரிட் உடன் முதுகலை டிப்ளோமா பட்டத்தினையும், கொழும்பின் மனித உரிமைகள் நிறுவனத்தில் இருந்து மனித உரிமைகள் டிப்ளோமா, மற்றும் இந்தியாவின் இந்தூர் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு நிர்வாகத்தில் டிப்ளோமா ஆகிய பட்டங்களை பெற்றுள்ளதோடு, பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.மேலும் இவர் தேசிய பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றவராவர். மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இலங்கையின் இராணுவ கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளதோடு, பாகிஸ்தானின் குவெட்டாவின் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டில் இராணுவ கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான 'கமாண்டன்ட் கோல்டன் பென்' விருதைப் பெற்ற இவர் இந்தியாவின் மோவ், இராணுவ யுத்த கல்லூரி மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் மூத்த கட்டளை பாடநெறியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் பூனேயில் உள்ள இராணுவ பொறியியல் கல்லூரியில் பொறியியல் குறித்த அவரது வெளிநாட்டு இராணுவ இளம் அதிகாரிகள் பாடநெறி கல்வியையும், பாக்கிஸ்தானின் ரிசல்பூரில் உள்ள இராணுவ கல்லூரி பொறியியல் கல்லூரியில் இடைநிலை செயற்பாடு பாடநெறி மற்றும் வெடிகுண்டு அகற்றும் பாடநெறி உள்ளிட்ட பாடநெறிகளையும் பூரத்தி செய்துள்ளார்.
அவர் படைப் பிரிவு தலைமையகத்தில் பதவி நிலை-111( நடவடிக்கைகள்), கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் பதவி நிலை -II ,இலங்கை இராணுவ கல்லூரியில் அஜுடன் மற்றும் பதவி நிலை அதிகாரி, ரிசேவ் ஸ்ரைக் படை (53 பிரிவு) பதவி நிலை-1 அதாரி, இராணுவ தலைமையகத்தில் பதவி நிலை அதிகாரி-1 (பயிற்சி), 56 வது படைப் பிரிவில் கேணல் பொது பதவி நிலை அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளதோடு, இராணுவத் தலைமையகத்தில் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரித இராணுவ தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் பிரிவு அதிகாரி கட்டளை, 8 வது கள பொறியாளர் படையணியின் (காலாட்படை பிரிவு) கட்டளை அதிகாரி, 6 வது கள பொறியாளர் படையணியின் (போர் பொறியாளர் பிரிவு), கட்டளை அதிகாரி, 524 வது காலாட்படை படைப் பிரிவின் (பருத்தித்துறை) தளபதி,இலங்கை பொறியாளர்களின் மைய தளபதியாக மூன்று ஆண்டுகள் மற்றும் பொறியியலாளர் பிரிகேட் தளபதி, உள்ளிட்ட நியமனங்களை வகித்துள்ளார். 57 வது காலாட்படைப் பிரிவின் படைத் தளபதி, இராணுவத் தளபதியின் பிரதான பதவி நிலை அதிகாரிகளின் நியமனங்கள், இராணுவத் தலைமையகத்தில் மாஸ்டர் ஜெனரல் போர்க்கருவி மற்றும் பொறியாளர் சேவை படையணியின் படைத் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் 41 வது தளபதி உள்ளிட்ட நியமனங்களையும் வகித்துள்ளார். அவர் 2020 ஜூன் 01 ஆம் திகதி இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியாகவும், 2019 ஜூலை 23 ஆம் திகதி இலங்கை பொறியாளர் படையணியின் படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
தனது சேவைக் காலத்தில் இலங்கை இராணுவ கல்லூரியில் அதிகாரி பயிற்றுவிப்பாளராகவும், இராணுவ கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் திசைமுகப்படுத்தல பதவி நிலை அதிகாரியாகவும் பணியாற்றினார், மேலும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் பயிற்சி இராணுவ பிரிவின் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் ரக்பி, கால்பந்து மற்றும் ஹாக்கி ஆகியவற்றில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தீவிர விளையாட்டு வீரராவார். அவர் இராணுவ நீச்சல் மற்றும் நீர்-போலோ குழுவின் தலைவராகவும், இலங்கை இராணுவ கால்பந்து சம்மேளனத்தின் பிரதி தலைவராகவும், இராணுவ ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். தற்போது, இராணுவ ரக்பி சங்க தலைவர் மற்றும் இராணுவ விளையாட்டு கழக தலைவராகவும் திகழ்கின்றார். இவரது புகழ்பெற்ற சேவைக்காக ரண சூர பதக்கம் (ஆர்.எஸ்.பி) மற்றும் விஷிஷ்ட சேவ விபீஷனய மற்றும் உத்தம சேவ பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு, அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக 10 க்கும் மேற்பட்ட சேவை பதக்கங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் சாகரவை மணந்து, அவருக்கு மூன்று மகள்களான நதுனி, சாதுனி மற்றும் கசுனி ஆகியோர் உள்ளனர். jordan Sneakers | Klær Nike