Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2020 20:24:42 Hours

காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் சுபாஷன வெலிகல அவர்களின் இறுதிக் கிரியைகள்

2009 ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில், 68 வது படைப் பிரிவின் 682 வது பிரிகேட் படைப் பிரிவுத் தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுபாஷன வெலிகல WWV RWP RSP USP அவர்களின் இறுதி கிரியைகள் ,நூற்றுக்கணக்கான இலங்கை சிங்கப் படையணியின் படை வீர்ர்கள் மத்தியில் வியாழக்கிழமை (10) பண்டாரகமையிலுள்ள அண்டுன்வென்ன கல்லறையில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி அவர்களின் நெருங்கிய ஒருங்கிணைப்பின் கீழ், சுகவீனமுற்ற நிலையிலிருந்த மேஜர் ஜெனரல் சுபாஷன வெலிகல அவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு மேலாக சிறந்த மருத்துவ சேவையை வழங்கிய போதிலும், கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் திங்கள்கிழமை (8) தனது 54 வது வயதில் காலமானார்.

அவரது இறுதி சடங்கு நிகழ்வில் பிரதி இரணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே, இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, பணிப்பாளர்கள் , இலங்கை சிங்கப் படையணியின் நிலைய தளபதி மற்றும் ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வியாழக்கிழமை (10) பண்டராகமை அண்டுன்வென்னயிலுள்ள அவரின் இல்லத்திற்கு சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அவரது இறுதி ஊர்வலம் இராணுவ மரபுகளுக்கு இணங்க இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. இலங்கை இராணுவக் குழு பாடல்கள் மத்தியில் எட்டு பேர் கொண்ட இராணுவக் குழுவினர் தேசியக் கொடியில் போர்த்தப்பட்டிருந்த போர் வீரரின் கலசத்தை சுமந்துகொண்டு சென்றனர்.

பின்னர் கல்லறையில் நடந்த இறுதி சடங்கு விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் இராணுவத் தளபதி சார்பாக இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்களினால் வெளியிட்ட சிறப்பு பகுதி I உத்தரவை தனது படைப்பிரிவின் ஒரு சிரேஷ்ட அதிகாரி வாசினார்.

பின்னர் இறுதிச் சடங்கில் பங்குபற்றியவர்கள் நிதானமாகவும் அமைதியாகவும் தங்களது துக்கங்களை வெளிப்படுத்திய அதேவேளை, ஒரு இராணுவ அதிகாரி இறந்தால் அவருக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலியின் அடையாளமாக சம்பிரதாய முறைப்படி 13 துப்பாக்கி சூட்டின் மூலம் தங்கள் மறைந்த மூத்த அதிகாரிக்கு வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது துணிச்சலான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் அவரது அடுத்த உறவினர்களுக்கு ஒரு சம்பிரதாயமாக வழங்கப்பட்டன.

இராணுவ சம்பிரதாய முறைப்படி, சில நிமிடங்களுக்குப் பிறகு அவரது பூதவுடல் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளை அனைவரும் தங்கள் அன்பான உறவினருக்கு மற்றும் இராணுவத்தின் இரண்டாவது காலாட்படை படைப்பிரிவின் முன்னாள் மூத்த இராணுவ அதிகாரிக்கு இறுதி பிரியாவிடை செலுத்தினர்.

இறுதிச் சடங்கின் போது வாசிக்கப்பட்ட இராணுவத் தளபதியால் வழங்கப்பட்ட சிறப்பு பகுதி I ஆணை பின்வருமாறு: best shoes | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov