10th December 2020 19:29:16 Hours
இலங்கை பொறியியல் படையின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன செவ்வாய்க்கிழமை (8) மத்தேகொடை கள பொறியியல் படைத் தலைமையகத்திற்கும் அதன் கீழுள்ள கட்டளை அலகுகளுக்கும் மரியாதை நிமித்தம் விஜயம் செய்தார்.
அவரின் விஜயத்தின் போது 8, 9, 10 மற்றும் 11வது கள பொறியியல் படைகளில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் பொறியியல் பிரிகேட்டில் அணிநடை மரியாதையும் வழங்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல் பிரிகேட்டில் புதிதாக கட்டப்பட்ட நாய்களின் சத்திர சிகிச்சை கூடத்தையும் நாய்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிடங்களையும் பொறியியல் பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவின் அழைப்பின் பேரில் திறந்து வைத்தார்.
பின்னர் இராணுவ பதவி நிலை பிரதானி பிரிகேட் தலைமையக வளாகத்திற்குள் அமையவிருக்கும் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். தேனீர் விருந்துபசாரத்தின் போது பொறியியல் படையின் சிரேஸ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.Adidas footwear | Nike sneakers