10th December 2020 15:28:46 Hours
விசேட படையணியின் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க திங்கள்கிழமை (7) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வவுனியா கொக்கெலிய 56 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய தளபதியாக கடமை ஏற்றார்.
56 வது படைப்பிரிவின் புதிய தளபதி வளாகத்திற்கு வருகைத் தந்த போது பதவி நிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். இராணுவ மரபுகளுக்கு ஏற்ப பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது பதவியேற்பிக்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக செயல்பட்டார். நிகழ்வின் நினைவாக மரக்கன்று நாட்டி வைத்தார். படையினருக்கான உரை மற்றும் தேனீர் விருந்துபசாரம் என்பன இடம்பெற்றன.
பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தளபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கு இப்புதிய நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். Authentic Nike Sneakers | Nike Air Max 270