Header

Sri Lanka Army

Defender of the Nation

09th December 2020 08:16:29 Hours

இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல்அதிகாரிகளிக்கான சைக்கிள் மற்றும் வாகன சாரதி பயிற்சி

இராணுவத் தளபதியின் எண்ணக்கருவிற்கமைய வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்துடன் இணைந்து, இராணுவ கல்வியற் கல்லூரி பாடத்திட்டத்திற்கு சைகிள் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான திறனை மீண்டும் அறிமுகப்படுத்திய பின்னர் இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரிகளுக்கான கற்றல் முதன்மை நிலையமான தியதலாவ இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற இளம் பயிலிளவல் அதிகாரிகள் 107 பேர் சைகிள் மற்றும் வாகன சாரதி திறன் சான்றிதழ்களுடன் வெள்ளிக்கிழமை (4) வெளியேறினர்.

66 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை இராணுவ சேவை படையின் சாரதி பயிற்சி பாடசாலை வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வனிகசேகரவின் வேண்டுகோளின் பேரில் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகளுக்கான 1 வது சைக்கிள் மற்றும் வாகன சாரதி பயிற்சி 2019 டிசம்பரில் நிறைவடைந்தது.

இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் கிருஷாந்த ஞானரத்னவின் அழைப்பின் பேரில் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வனிகசேகர பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு சைக்கிள் மற்றும் வாகன சாரதி பயிற்சியில் தகுதி பெற்ற பயிலிளவல் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை (4) சான்றிதழ்களை சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய வழங்கி வைத்தார்.

சைக்கிள் மற்றும் சாரதி பாடநெறி விரிவுரைகள், செயன்முறை மோட்டார் சைக்கிள் மற்றும் இலகுரக வாகன பயிற்சி அமர்வுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் 9வது இலங்கை இராணுவ சேவை படையின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சியாளர் குழுவினால் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வனிகசேகர தனது உரையில் 1987-1988 காலகட்டத்தில் சைக்கிள் சவாரி பாடநெறிகள் நடாத்தியமை பற்றிய நினைவுகளையும், போர்க்களத்தில் செயல்பாட்டு அர்ப்பணிப்புகள் எவ்வாறு விநியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் நடைமுறைகள் எவ்வாறு இருந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார். செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதி பத்திரம் மற்றும் நம்பிக்கையுடனான சைக்கிள் சவாரி மற்றும் வாகனம் செலுத்தல் திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பது பயிலிளவல் அதிகாரிகளுக்கு அமைதி, அவசரநிலை அல்லது போர்க்களத்தில் மேலதிக தகமையாகும். சர்வதேச அளவிலான படைகள் ஆட்சேர்ப்புக்கு இது ஒரு அத்தியாவசிய தகமையாக கருதப்படுகிறது என குறிப்பிட்டார்.

இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி கல்விப் பணியாளர்கள் மற்றும் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் அதிகாரிகள் இவ்விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.Sports News | Nike Shoes