09th December 2020 16:45:36 Hours
இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம் அனைத்து படையினரின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் கந்தகாட்டில் அதன் முதல் தூய பால் உற்பத்தியின் 1000 போத்தல்களை படையினருக்கு விநியோகிப்பதற்காக இராணுவ சேவா வனிதா பிரிவு நலன்புரி கடைகள் ஊடாக விநியோகிக்கின்றது.
இராணுவத் தளபதி தனது 'துரு மிதுரு-நவ ரட்டக் விவசாய மற்றும் அபிவிருத்தி சார்ந்த முயற்சியின் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களிலும் தன்னிறைவு பெறுவதற்கான மற்றொரு மைல்கல்லான இந்த திட்டம், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. முன்னனி இராணுவ நலன்புரி கடைகளான கெந்தலந்த, மானிங் டவுன், ருக்மல்கம, பனாலுவ, ஜாவத்தை, வத்தளை மற்றும் படையணி நலன்புரி கடைகளில் சலுகை விலையில் தூய பால் போத்தல்கள் விற்பனை செய்வதற்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திரஜித் கந்தனராச்சி அவர்களால் இராணுவ சேவா வனிதா பிரிவின் கர்ணல் ஒருங்கிணைப்பு கர்ணல் சுமேத பாலசூரியவிடம் முதல் தொகுதி 1000 தூய பால் போத்தல்களை செவ்வாய்க்கிழமை (8). ஹிம்புதான இராணுவ சேவா வனிதா பிரிவின் மத்திய விநியோக தளத்தில் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார். இதன் போது 6 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எம்.தந்திரி, இராணுவ சேவா வனிதா பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள், விவசாய பணிப்பக அதிகாரிகள் மற்றும் சில படையின் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நிகழ்வில் இணைந்துக் கொண்டனர்.
தொற்று நீக்கப்பட்ட 300 மில்லி கொண்ட ஒவ்வொரு பால் போத்தலும் வெண்ணிலா, சொக்கலேட் அல்லது சுவையற்றவையாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் கந்தகாடு இராணுவ பண்ணையில் ஒரு நாளைக்கு 1000 பாட்டில்களை பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்க பயிற்சி பெற்ற 35 இராணுவ வீரர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் வீரர்களுக்கான பால் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் தேசிய கால்நடை மேம்பாட்டு சபையில் (NLDB) பசுக்களை வாங்கி விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் தம்புத்தேகம நிரவிய இராணுவ பண்ணையில் பால் உற்பத்தி செய்யும் திட்டத்தை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இராணுவத்தின் பால் பதப்படுத்துதல் முறைமையை அவதானித்த கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் இராணுவம் தயாரிப்புக்கான எஸ்.எல்.எஸ் சான்றிதழை அங்கிகரித்துள்ளது. . Sportswear free shipping | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ