08th December 2020 10:20:04 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையின் புதிய படைத் தளபதி ஜேர் ஜெனரல் வசந்த ஆப்று 4, 5 (தொண்டர்) மற்றும் 24 வது இலங்கை இலேசாயுத காலாட் படை முகாம்களுக்கு 4 ம் திகதி வெள்ளிக்கிழமையும் 10, 19, 20, 17 (தொ ) இலங்கை இலேசாயுத காலாட் படை முகாம்களுக்கு 5ம் திகதி சனிக்கிழமையும் விஜயம் செய்தார்.
இந்த விஜயங்களின் போது, அந்தந்த முகாம்களின் கட்டளை அதிகாரிகள் படைத் தளபதியினை வரவேற்றதுடன் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், படைத் தளபதி படையினருக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில் வாழ்க்கையின் சிறந்த ஒழுக்கம் மற்றும் தொழில்லான்மை அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தினார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக சிரேஸ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.Adidas footwear | adidas Yeezy Boost 350